பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

176

பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் ராமேஸ்வரத்திலிருந்து காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். உடுமலை அருகே வந்தபோது, நிலைதடுமாறிய கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.