குரங்கு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!

285

பொள்ளாச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஆழியார் குரங்கு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. ஆழியார் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.