பொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி ..!

1400

பொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.