பொள்ளாச்சியில் காவல் ஆய்வாளருக்கு கத்தி குத்து : ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

324

பொள்ளாச்சியில் காவல் ஆய்வாளரை கத்தியால் குத்திய ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் கியூ பிரிவு காவல் ஆய்வாளராக செல்லத்துரை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கு சம்பந்தமாக பொள்ளாச்சி நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அப்போது ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரவுடிகளை செல்லத்துரை தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் காவல் ஆய்வாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியது. இதனை கண்ட சக காவலர்கள் செல்லத்துரையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரை தாக்கிய விஜய், பிரேம்குமார், ஸ்ரீநாத், சூர்யா ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.