திருநாவுக்கரசர் உட்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல்

68

பொள்ளாச்சி பாலியல் தொடர்பாக திருநாவுக்கரசர் உட்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுடன், வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த தகவல்களை பொதுமக்கள் தொலைநகல் மற்றும் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அறிவிப்பு வெளியிட்டது. ஆபாச வீடியோ கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முதல் குற்றவாளியான பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். 4 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் தங்களின் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.