முற்றிலும் போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் ..!

318

முற்றிலும் போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தூய்மையே இந்தியா திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். பின்னர், பேசிய அவர், ஒவ்வொருவரும் தூய்மையை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என குறிப்பிட்டார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முற்றிலும் போலியோ, பெரியம்மை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமிதத்துடன் கூறினார்.