வன்முறையாக மாறிய கண்டன பேரணி காவலர்கள் உட்பட 3 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்!

271

அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள் நடத்திய பேரணியின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலினால் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்பு படையை வழிநடத்திய ராபர்ட் இ லீயின் சிலை அகற்றப்பட போவதாக தகவல்கள் வெளியாயின. இதனை கண்டித்து விர்ஜினியா மாநிலத்தில் வலதுசாரி வெள்ளை இனத்தவர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். இதில் வேறு சிலர் புகுந்து பேரணியில் ஈடுப்பட்டவர்களை தாக்குல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
வன்முறையின் போது ஒருவர் காரினை கொண்டு மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவசர பிரகடனம் போடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே காவலர் ஹெலிக்காப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் டிரம்ப் தனது ஆழ்ந்த அனுதாபத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.