காவலர் வீர வணக்க தினம் கடைபிடிப்பு : பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி..!

211

காவலர் வீர வணக்க தினத்தையொட்டி பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களுக்கு சென்னையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
காவலர் வீர வணக்க தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு சென்னையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர். காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கிழக்கு கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா, முப்படை அதிகாரிகளும் காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று, டெல்லியிலும் காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.