நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் !

459

நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் கூறியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று தனது ரசிகர்களை நடிகர் கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.கமலின் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தேவராஜன் என்பவர் நடிகர் கமல் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் கூறிய கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கமலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.