மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்துக் கொலை..!

502

நெல்லை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்த சிறைக் காவலர் போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்கலத்தை சேர்ந்தவர் பாலகுரு. இவர் பாளையங்கோட்டை சிறையில் காவலராக பணிபுரிகிறார். கடந்த 25 நாட்களுக்கு முன்பு இவருக்கும் வேலம்மாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் வேலம்மாளின் நடத்தை மீது சந்தேகப்பட்ட பாலகுரு அவரை திருச்செந்தூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பாளையங்கோட்டை பொட்டல் அருகே நான்கு வழிச் சாலையில் சென்றபோது மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேலம்மாளின் கழுத்தை துண்டித்துக் கொலை செய்தார். இதையடுத்து போலீசில் சரணடைந்த அவர் மீது பாளையங்கோட்டை மற்றும் தாழையூத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.