47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்..!

119

பாடாலூரில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் வட்டம் பாடாலூரில், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகள், 47 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் மருதை ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.