தேர்தல் அதிகாரிகளை தாக்கிய அமமுக கட்சியினர் 4 பேரிடம் போலீசார் விசாரணை

95

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி அமமுக அலுவலகத்தில் அதிகாரிகளைத் தாக்கிய அமமுகவினர் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில், பணம் பதுக்கி வைத்திருப்பதாக நேற்றிரவு தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் அமமுக அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது அங்கிருந்தோரால் தாக்கப்பட்டனர். தாக்கியோரை எச்சரிக்கும் வகையில் போலீஸார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமமுக தேர்தல் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பாக அமமுகவினர் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.