போலாந்து ரயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு சென்ற கார்!

220

போலாந்து நாட்டில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்ட கார் ரயிலில் மோதாமல் நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
போலாந்து நாட்டில் உள்ள முக்கிய சாலை ஒன்றினை கடந்து செல்லும் ரயில் தண்டவாளத்தில், ரயில் செல்வதற்கு முன்பாக ரயில்வே கேட்டை ஊழியர்கள் மூடினர். அப்போது அந்த சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ரயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தை கடந்தது. ஒருபுறத்தில் இருந்த கேட்டை உடைத்துக் கொண்டு ரயில் பாதையைக் கடந்த கார், மறுபுறம் இருந்த கேட்டுக்கு முன்னர் நின்றுவிட்டது. அப்போது அதிவேகமாக வந்த ரயில், காரின் பின்புறத்தை உரசிச் சென்றது. இதனால் பதறியடித்துக் கொண்டு காரில் இருந்த நான்கு பேரும் வெளியேறினார்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த பரபரப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.