35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது

131

பொள்ளாச்சி அருகே மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை சுகாதரத்துறை மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சாதிக் என்பவரின் மளிகை கடையை சோதனை செய்தபோது 6 மூட்டைகளில் 35 கிலோ எடையுடைய பான்பராக், பீடி உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடையின் உரிமையாளர் சாதிக் மற்றும் பாபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் கைலாசபுரம் பகுதியில் கஞ்சா விற்கபடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தேவி என்ற பெண்ணை சோதனை செய்தனர் அதில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.