போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்கிறார்கள், அமைச்சர் கடம்பூர் ராஜு!

332

போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறும் கருத்துக்கள் பக்குவமில்லாதவை என்று கூறினார். இந்த கருத்துக்களால் நல்ல நடிகராக இருந்த கமல், காமெடி நடிகராக மாறிவிட்டார் என்று அவர் விமர்சித்தார். ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளதால், அணிகள் இணைப்பில் தாமதம் ஏற்படாது என தெரிவித்த கடம்பூர் ராஜு, போயஸ் கார்டன் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்பதாக கூறினார்.