நீதிமன்ற வளாகத்திலேயே குற்றவாளிகளுக்கு அடி உதை..!

423

சென்னை மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் அடித்து உதைத்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

சென்னை அயனாவரத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமியை லிப்ட் ஆப்பிரேட்டர் உள்ளிட்ட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 17 பேரும் கைது செய்து செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளிகளை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து 17 பேரையும் வரும் ஜூலை 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து வழக்கறிஞர்கள் அடித்து உதைத்தனர். இதனால் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.