ஓ.பி.எஸ், பாண்டியராஜன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்-திமுக எம்.எல்.ஏ.பிச்சாண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

320

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க கோரி திமுக எம்.எல்.ஏ.பிச்சாண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிப்ரவரி மாதம் தமிழக சட்ட பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் இருவரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, இரு அணிகளும் இணைந்த நிலையில், ஓ.பி.எஸ் துணை முதலமைச்சராகவும். பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கொறடா உத்தரவினை மதிக்காமல், அரசுக்கு எதிராக வாக்களித்த இருவரையும் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ.பிச்சாண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமிழக ஆளுநர் மற்றும் சட்டப் பேரவை செயலர் இருவரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.