பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம்..!

210

பரபரப்பான கட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு வரும் 25 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, 24 ஆம் தேதி கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவுக்கு செல்கிறார். அந்நாட்டின் எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர், வரும் 25-ம் தேதி உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இதையடுத்து, அந்நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ருவாண்டா நாட்டிற்கு செல்ல மோடி திட்டமிட்டுள்ளார்.