பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க பா.ம.க தொடர்ந்து பாடுபடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

394

பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க பா.ம.க தொடர்ந்து பாடுபடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்பதாக கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை தமிழகத்தில் இருந்து, கர்நாடக மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வலியுறுத்தியதை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு முடங்கிக் கிடந்த நிலையில்,
அந்த முடக்கத்தை நீக்கி இயக்கத்திற்கு கொண்டு வந்ததில் பா.ம.க. ஆற்றிய பங்கு மனதிற்கு நிறைவை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க பா.ம.க தொடர்ந்து பாடுபடும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.