6 நாட்கள் பயணமாக ஷெசல்ஸ் அதிபர் டேனி பவுரி இந்தியா வருகை..!

202

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஷெசல்ஸ் அதிபர் டேனி பவுரிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஷெசல்ஸ் அதிபர் டேனி பவுரி 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். ராஷ்டிரிபதி பவனில் அதிபர் டேனி பவுரிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டேனி பவுரி பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.