பிரதமர் மோடி ஒரு திறமையான நிர்வாகி-பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் புகழாரம்!

315

பிரதமர் மோடியின் திறமையான நிர்வாகத்தால் இந்தியா வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி நாட்டை ஆட்சி செய்தும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று கூறினார். இந்த குறையை போக்கும் வகையில் பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத்தால் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக நிதிஷ்குமார் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்ற அடைந்து வருவதாக தெரிவித்த நிதிஷ்குமார், இவற்றையெல்லாம் பொறுத்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டுவதாக கூறினார்.