அனைத்து கட்சிகளின் ஆதரவுடனே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பிதார்-காலாபுராகி ரயில்பாதை திட்ட துவக்க விழாவில் பிரதமர் நரந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நேரடி பயன் பரிமாற்ற திட்டத்தின் மூலம் இடைதரகர்கள் ஒழிக்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். 15 ஆயிரம் வீடுகள் வரையில் மின்வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என கூறிய மோடி, அனைத்து கட்சிகளின் ஆதரவுடனே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது என தெரிவத்தார். கூடிய விரைவில் ஜி.எஸ்.டியில் உள்ள குறைகள் அனைத்தும் களைக்கப்படும் என உறுதியளித்த அவர், எதிர்கட்சிகள் ஜிஎஸ்டி குறித்து தவறான கருத்துக்களையே பரப்பி வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.