பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது..!

272

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. அதன்படி, மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளைக்குள் அறிவிப்பு வெளியாகுமா? என தமிழக விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்தநிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைகளை ஆலோசித்து காவிரி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.