நாடாளுமன்ற நடவடிக்கையை முடக்குவதால் அரசுக்கு இழப்பு இல்லை – பிரதமர் மோடி

325

நாடாளுமன்ற நடவடிக்கையை முடக்குவதால் நாட்டிற்கு தான் இழப்பு என்றும், அரசுக்கு இழப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி அவையில் கூச்சல், குழப்பம் எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்நிலையில் எம்.பி.க்களுக்கு நடந்த விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,ஏழை மக்களின் குரலை பிரதிபலிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் என்று கூறினார். அவையை முடக்குவதால் நாட்டிற்கு தான் பேரிழிப்பு என்றும், அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தை செயல்டுபடுத்த விடுங்கள் என்றும் பிரதமர் மோடி எம்.பிக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.