பிளாஸ்டிக் மீன்- வைரலாகும் வீடியோ பொதுமக்கள் அதிர்ச்சி, ஆய்வு நடத்த கோரிக்கை!

576

பிளாஸ்டிக் மீன்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக இணையத்தில் பதிவிட்டுள்ள வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
நைஜீரிய சூப்பர் மார்க்கெட்டில் மீன் வாங்கியதாகவும், அதை கழுவ முயன்ற போது பிளாஸ்டிக் என தெரிய வந்ததாகவும் பெண் ஒருவர் இணைய தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டையினால் பெரிதும் அச்சமடைந்துள்ள மக்களை இந்த வீடியோ பதிவு மேலும் பதற வைத்துள்ளது. நெட்டிசன்கள் மத்தியில் இதில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பார்த்த சிலர் நீண்ட நேரம் குளிர்சாதன பெட்டியில் இருந்த மீன் இதுபோன்று காட்சியளிக்கும் என்றும், பிளாஸ்டிக் மீனா என்பதை ஆராய சூடு செய்து பார்க்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.