பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அரசாணை செல்லும் – ஐகோர்ட் அதிரடி

89

மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்த தடையாணை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கு விசாரணையில், பிளாஸ்டிக் தடை அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என நிறுவனங்களின் தரப்பு வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனையடுத்து, சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுமுதல் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள அரசாணை செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்,

தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிததுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.