பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து..!

79

மும்பை அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கந்திவாலி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இந்நிலையில் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தன. இந்த விபத்தில் கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. கிடங்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.