பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்..!

99

சேலத்தில் ஒருமுறை பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து நேரிடையாக சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிககும் பணியை துவக்கி வைத்துப்பேசிய மாநகராட்சி ஆணையர் சதீஷ், பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் தெரிவித்தால், வாகனம் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.