தனியார் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை | உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார்.

320

கன்னியாகுமரி அருகே தனியார் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மார்க்கெட்டில், ஒப்பந்ததாரர் ஜான் என்பவர் 15 முட்டைகளை வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் வேகவைத்து பார்த்த போது, அதில் ஒரு முட்டை பிளாஸ்டிக் முட்டை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஜான் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தார். இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். தனியார் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.