கரூர் நகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

337

சுற்றுச் சூழலை பாதிக்கக் கூடிய பாலித்தீன் பைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த புகாரையடுத்து கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் 75க்கும் மேற்பட்ட கடைகளில் நடைபெற்ற சோதனையில், 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டீ கப்புகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.