6 ஆயிரம் ரெயில் நிலையங்களில் விரைவில் இலவச வைபை வசதி – அமைச்சர் பியுஷ் கோயல்

300

6 ஆயிரம் ரெயில் நிலையங்களில் விரைவில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நடைபெற்ற ஸ்மார்ட் ரயில்வே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்பத்தின் நவீன அம்சங்களை பயணிகளுக்கு கிடைக்கச் செய்வதில் ரெயில்வே நிர்வாகம் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ரெயில்களின் நேரத்தை கடைபிடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறிய பியுஷ் கோயல், கடந்த ஏப்ரல் முதல் குறித்த நேரத்தில் 74 சதவீதம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். ரெயில் இன்ஜின்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரயில் சென்று கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.