புயல் குறித்து மத்திய அரசு முன்கூட்டிய தெரிவிக்கவில்லை-கேரள முதல்வர் பினராயி விஜயன்!

463

ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார். ஒகி புயல் கேரளத்தை தாக்குவது குறித்து மத்திய அரசு முன்கூட்டியே தகவல் தரவில்லை என சுட்டிக்காட்டிய பினராயி விஜயன், இதனாலேயே கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.