கேரளாவுக்கு இதுவரை ரூ.738 கோடி நிவாரண நிதி வந்துள்ளது – முதல்வர் பினராயி விஜயன்

187

கேரளாவுக்கு 738 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் பெய்த மழையால் 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.மேலும வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண தொகையும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் வெள்ள பாதிப்பு தொடர்பாக கேரள சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவுக்கு ஆகஸ்ட் 28ம் தேதி வரை 738 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக பெறப்பட்டுள்ளதாக கூறினார். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.