ஓட்டுக்கு பணம் வாங்கி கொள்ளுங்கள் எனக்கூறிய பிரச்சாரம் செய்த ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

168

ஓட்டுக்கு பணம் வாங்கி கொள்ளுங்கள் எனக்கூறிய பிரச்சாரம் செய்த கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளதால், ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த கெஜ்ரிவால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வேட்பாளர்கள் பணம் கொடுத்தால், மறுக்காமல் வாங்கி கொண்டு ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போடுங்கள் எனக்கூறினார். இது பற்றி வந்த புகார்களை விசாரித்த, தேர்தல் கமிஷன், 21ம் தேதி, கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘இது போன்று, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், எதிர் காலத்தில் நீங்கள் பேசினால், தேர்தல் கமிஷன், உங்கள் மீதும், உங்கள் கட்சியின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கும்; உங்கள் கட்சி அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, எச்சரித்து இருந்தது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘ஓட்டுக்கு பணம் வாங்குங்கள் என்ற கோஷத்தை அனுமதிக்க வேண்டும்’ என்றும், ‘இதன் மூலம், தேர்தலில் லஞ்சத்தை ஒழிக்க முடியும்’ என்று, அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, கோவா மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். டில்லி முதல்வராகவும், கோவாவில் ஆம் ஆத்மியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கும் அவர், பிரசாரத்தின் போது, சட்டத்தை மதித்துமுன்மாதிரியாக இருக்க வேண்டும் ஆனால், அவர் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்திற்கு அளித்த வாக்குறுதியை மீறி தொடர்ந்து, சட்டத்தை மீறி வருகிறார். இதனால், அவர் அறிக்கை காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான அறிக்கையை ஜனவரி 31ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அனுப்ப வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது.