சின்னப்பிள்ளை காலில் விழுந்த வாஜ்பாய்..!

170

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு வருத்தம் அளிப்பதாக சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவரின் காலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விழுந்தார். அதன் பிறகு சின்னப்பிள்ளை தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு வருத்தம் அளிப்பதாக சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார். விருது வழங்கும் போது சின்னப்பிள்ளை வடிவத்தில் சக்தியை பார்க்கிறேன் என வாஜ்பாய் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.