பை வகை உணவை அதிவேகமாக சாப்பிடும் வித்தியாசமான போட்டி | 4வது முறையாக கோப்பையை தட்டிச் சென்ற இளைஞர்.

1718

பை வகை உணவை அதிவேகமாக சாப்பிடும் வித்தியாசமான போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற அதிவேகமாக பை வகை உணவை உண்ணும் போட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட பை வகை உணவை மார்டின் என்ற இளைஞர் 32 வினாடிகளில் சாப்பிட்டு வெற்றி கோப்பையை தட்டிச் சென்றார். இதன் மூலம் அவர் 4வது முறையாக இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.