ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு கடும் தண்டனை… பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை

224

அரசு துறைகளில் ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறிவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ எச்சரித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மே மாதம் புதிய அதிபராக பதவியேற்ற நாளில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பில், தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இதுவரை போதைப்பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்வோர் என சுமார் 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறிய ரோட்ரிகோ அரசு துறை அதிகாரிகள் ஊழல் செய்யதால், ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வானில் இருந்து வீசி எறிவேன் என காட்டமாக பேசினார். இதற்கு முன்பு மேயராக பதவி வகித்தபோது மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ரோட்ரிகோ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.