ஆசியான் – கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பைன்ஸ் பயணம்!

378

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் செல்கிறார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 12ம் தேதி முதல் இருபத்தி ஐந்தாம் தேதி வரை, ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள் கலந்து கொண்டு பொருளாதாரம், வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, 12ம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.