குவைத் நாட்டிற்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது..!

609

குவைத் நாட்டிற்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 23 லட்சம் பேர் வெளிநாடுகளில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடான குவைத்தில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அங்கு வேலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்துக் கொள்வதாக புகார் எழுந்தது. இதுபோன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ள நிலையில், குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். இதனால் இருநாட்டுக்கும் இடையேயான சுமுக உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.