ஒரு நிறுவனத்தில் 10 தொழிலாளர் இருந்தாலும் பி.எப்.பிடிக்கப்படும்! மத்திய அரசு புதிய முடிவு!!

393

புதுடெல்லி, ஆக.2–
ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) பிடித்தம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது 20 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் மட்டும் இபிஎப் பிடித்தம் செய்யப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய தொழிலாளர் நலன், வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:-–
அதன்படி ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்றினாலும் அவர்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்யப்படுவது கட்டாயமாக்கப்படும். தொழிலாளர் வைப்பு நிதியின் ஒரு பகுதியை கட்டாயமாக ஓய்வூதியத்திட்டத்துக்கும் மாற்றும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை. நாட்டில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக மேலும் பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இவ்வாறு கூறினார்.