புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை | பெட்ரோல் ரூ.77.19, டீசல் ரூ.69.27 க்கு விற்பனை ..!

1274

இது வரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கான உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியதை தொடர்ந்து நாள் தோறும் கண்ணுக்கு தெரியாமல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று 76 ரூபாய் 99 காசுகளுக்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை, இன்று மேலும் அதிகரித்து 77 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், நேற்று 69 ரூபாய் 6 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் விலை 69 ரூபாய் 27 காசுகளாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை மாதம், 66 ரூபாய்க்கு விற்பனையான பெட்ரோல் விலை தற்போது 10 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.