2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

184

2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த ஓராண்டாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துக்கொண்டே சென்றது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறிவருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

இந்நிலையில் சில நாட்களாக பைசா கணக்கில் சரிவை சந்தித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 நாட்களாக எந்த மாற்றமுமின்றி அப்படியே உள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.