பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதிப்பு..!

275

பெட்ரோல், டீசலை விலையை, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது நடைமுறைச் சாத்தியமற்றது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் அதிக அளவு வரிவிதிப்பதைச் சுட்டிக்காட்டினார். ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரம்பு 28 சதவீதமாக உள்ள நிலையில், மத்திய – மாநில அரசுகளின் வரிகளைச் சேர்த்தால் அதைவிட அதிகமாக வரும் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மாநிலங்கள் முன்வருமா? என்பதைக் கூற முடியாது என்பதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது நடைமுறை சாத்தியமற்றது என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.