பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

427

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் உயர்ந்து இன்று 81 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 54 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற வேண்டும், மேலும், எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.