பந்த் நடத்திய மறுதினமே பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு

262

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழுஅடைப்பு போராட்டம் நடத்திய மறுதினமே பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் பர்பானி என்ற பகுதியில் பெட்ரோல் விலை 90 ரூபாயை எட்டியது. நாட்டிலேயே, வரலாற்றில் முதல் முறையாக, ஒரு லிட்டர் பெட்ரோலை 90 ரூபாயை தாண்டி விற்பனை செய்யும் இடம் என்ற சோதனை மிகுந்த சாதனையை இந்த பகுதி படைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 87 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் 72 ரூபாய் 97 காசுகளாகவும் உள்ளது மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 88 ரூபாய் 26 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 44 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து, 84 ரூபாய் 5 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து, 77 ரூபாய் 13 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.