பெட்ரோல், டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பணபரிவர்த்தனை செய்பவர்களுக்கு முக்கால் சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

351

பெட்ரோல், டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பணபரிவர்த்தனை செய்பவர்களுக்கு முக்கால் சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஒரு மாதத்தில் இணைய தள பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.

உணவு, ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை மின்னணு முறையில் மேற்கொண்டால் ஐந்து சதவீதம் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர்,

மின்னணு முறையில் ரயில்வே டிக்கெட்டுக்கள் பதிவு செய்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்படும் என்று கூறினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு முக்கால் சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்தார்.

சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு பத்து சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிய அவர்,

ரயில்வே மாதந்திர டிக்கெட்டுக்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்பவர்களுக்கு அரை சதவீதம் சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் ஒரு லட்சம் கிராமங்கள் ஸ்வைப் மிஷின் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் மக்களை பழக்கப்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.