விதிகளை மீறி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆயிரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

270

விதிகளை மீறி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆயிரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி அறிவித்தார். அதேநேரம், இந்த ரூபாய் நோட்டுக்களை பெட்ரோல் பங்க்குகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் விதிகளை மீறி பழைய ரூபாய் நோட்டுக்களை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மாற்றி கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கடந்த 50 நாட்களில் பெட்ரோல் பங்குகளில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விவரங்கள் குறித்து வருமானவரித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் விற்பனையை அதிகரிக்காமல் வங்கிகளில் அதிகஅளவு பணம் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வங்கிகளில் அதிகளவு டெபாசிட் செய்த ஆயிரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது