பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

296

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOC, ONGC, BPCL உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறினார். கச்சா எண்ணெய் விலை குறையும்போது, எண்ணெய் நிறுவனங்களின் லாபம் மற்றும் விலை நிர்ணயத்தில் பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் நிர்வாக வசதிக்காக எண்ணெய் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான திட்டம் குறித்து மத்திய அரசு தற்போது ஆலோசித்து வருவதாக தர்மேந்திர பிரதான் கூறினார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.