பெட்ரோல், டீசல் விலை பிரச்சினையில் , அவசர உணர்ச்சிப் போக்கில் அரசால் செயல்பட முடியாது-தர்மேந்திர பிரதான்…!

461

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்சினை குறித்து சிந்திக்காமல் அவசர உணர்ச்சிப் போக்கில் அரசால் செயல்பட முடியாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் நிலையாகவும், வேகமாக வளர்ந்து வருவதாகவும் இருப்பதால் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்றார். இந்த விலையேற்றமானது அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவு போன்ற சர்வதேச சந்தைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்பட்டதாகும் என சுட்டிக்காட்டினார். அதேசமயம் இந்த பிரச்சினை குறித்து முழுமையாகச் சிந்திக்காமல், அவசர உணர்ச்சிப் போக்கில் அரசால் செயல்பட முடியாது என்று கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்லியில் ஹைட்ரஜன் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் 50 பேருந்துகளை இயக்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதை வரவேற்றார்.