மின்சார வாகனங்களால் அரசுக்கு எரிபொருள் சிக்கனம் – நிதி ஆயோக்

371

மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு மாறினால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக்கின் தரவுப்படி, 17 கோடி இருசக்கர வாகனங்கள் நாட்டில் உள்ளன. அவை தோராயமாக நாள் ஒன்றுக்கு அரை லிட்டருக்கும் சற்று அதிகமாக பெட்ரோல் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டால் ஆண்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் 200 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறது. அந்த வகையில் 17 கோடி இசக்கர வாகனங்களும் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 400 கோடி லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய் வீதம் கணக்கிட்டால், 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் இதற்கு செலவழிக்கப்படுகிறது- எனவே இருசக்கர வாகனங்கள் அனைத்தும மின்சாரத்தால் இயங்கும் வகையில் மாற்றினால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறையும் என நிதி ஆயோக் விவரித்துள்ளது.